வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமிர்தசரஸ்,: பஞ்சாபில் உள்ள சீக்கிய பொற்கோவிலில், முகத்தில் மூவர்ணக் கொடி வரைந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘இது இந்தியா இல்லை; பஞ்சாப்’ என, கோவில் ஊழியர் கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
சமீபத்தில் ஒரு பெண், இந்த கோவிலுக்கு வந்தார். அவரது முகத்தில், மூவர்ணக்கொடி வரையப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த கோவில் ஊழியர் ஒருவர், அந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தார். இது குறித்து அந்த பெண்ணும், அவருடன் வந்த ஒருவரும், கோவில் ஊழியரிடம் காரணம் கேட்டனர்.
அதற்கு அந்த ஊழியர், ‘முகத்தில் மூவர்ணம் வரைந்து வந்திருப்பதால் அனுமதி இல்லை’ என்றார். இதற்கு பதில் அளித்த அந்த பெண், ‘இந்திய தேசியக் கொடியைத் தானே வரைந்துள்ளேன். இது இந்தியா இல்லையா’ என கேட்டார்.
அதற்கு அந்த ஊழியர், ‘இது பஞ்சாப்; இந்தியா இல்லை’ என்றார். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement