வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற காரணத்துக்காக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க, மத்திய, மாநில அரசுகள் மறுக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் தரப்படுவது இல்லை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற காரணத்துக்காக, அவர்களுக்கு ரேஷன் கார்டு தரப்படுவது இல்லை. எனவே, அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
![]() |
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அசானுதீன், அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மட்டும், அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அனுமதி மறுக்கக் கூடாது.
பசியால் வாடுவோர் எங்கிருந்தாலும், அவர்களை தேடி கண்டறிந்து அவர்களது பசியை தீர்க்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement