கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்தார்கள். சென்னை உயர் நீதிமன்றம் மன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை விதிக்க முயற்சி செய்தார்கள்.
இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என நான் பலமுறை கூறி வந்துள்ளேன். அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் பிரிவினைவாத தீய சக்திகள்… குறிப்பாக தனி தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார். அதற்கு தான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார். பாஜகவிற்கு பெரிய பிரசார பீரங்கியே ராகுல் காந்திதான்.
ராகுல் காந்தி பேசி விட்டு வந்தால்.. 10,000 ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாக தான் விழும். பாஜக மாநிலத் தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய், இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும், அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவர். அவர் வெளியிட்டது பா.ஜ.க கட்சியின் கருத்துதான்.
ஆளுநர் விவகாரத்தில் தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்துக்கு போயிருக்கிறது. ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசியிருக்கிறார். ஸ்டாலின் அதிகம் பேசினால் அரசாங்கம் போய்விடும்.” என்றார்.