ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
வெற்றி நாயகன்ஒரு கட்டத்தில் தொடர்தோல்விகளில் இருந்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பினார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான அப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான நானே வருவேன் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வாத்தி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்த வாத்தி திரைப்படம் மாஸ் ஹிட்டடித்தது
எதிர்பார்ப்புதனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ் மீண்டும் இயக்குனராக களமிறங்க இருக்கின்றார். தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கின்றார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜெ.சூர்யாவும் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. மிகப்பெரிய பொருட்ச்செலவில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது
மீண்டும் கூட்டணிதனுஷ் காலா படத்திற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் மாரி செல்வராஜுடன் இணையும் தனுஷ் அப்படத்தை தானே தயாரிக்கவும் இருக்கின்றார். இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. பல வருடங்கள் கழித்து தனுஷ் மீண்டும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்குவது அவரது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாரி செல்வராஜுடன் அவர் இணைவது எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது
முதல் முறையாகஇந்நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் இணையும் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதன் மூலம் முதல் முறையாக தனுஷ் மற்றும் வடிவேலு கூட்டணி இணையவுள்ளது. படிக்காதவன் படத்தில் முதலில் வடிவேலு தான் நடித்தார் என்றும், அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு அப்படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் வந்தன. அதன் பிறகு தனுஷ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டதற்காக தனுஷ் பழசை மறந்து வடிவேலுவுடன் இணைந்து நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது