Eeramana Rojave 2 :முதலிரவில் உல்ட்டா.. காவ்யா காலில் விழுந்த பார்த்தி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான ஈரமான ரோஜாவே 2 தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் துரத்தியடிக்க, தன்னுடைய வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு வந்த காவ்யா தற்போது மீண்டும் பார்த்தியுடன் இணைந்துள்ளார்.

ஜோடி மாற்றி திருமணம் நடந்த போதிலும், திருமணத்திற்கு பிந்தைய காதல் மிகவும் சிறப்பானது என்பதை உணர்ந்துள்ள காவ்யா மற்றும் பார்த்தி ஜோடி தற்போது தங்களது வாழ்க்கையை சிறப்பாக துவங்கியுள்ளனர்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் : விஜய் டிவி எப்போதுமே சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. நிகழ்ச்சிகளுக்கு இணையாக சீரியல்களுக்கும் சிறப்பான பிரமோஷன்களை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு தொடருக்கும் அடுத்தடுத்த ப்ரமோக்களை கொடுத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சீரியல்களின் டிஆர்பியையும் உயர்த்தி வருகிறது. அந்த வகையில், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா தொடர்களை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே 2 தொடரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இரண்டு ஜோடிகள், சந்தர்ப்ப சூழல்களால் ஜோடி மாற்றி திருமணம், அதனால் வரும் பிரச்சினைகள் என அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை தந்துவந்த இந்தத் தொடரில் காவ்யா மற்றும் பார்த்தி இடையிலான பிரச்சினைகள், காவ்யாவின் திருமணத்திற்கு முந்தைய காதல், அது தெரியவரும்போது பார்த்தியின் ரியாக்ஷன்ஸ், ஆனாலும் காவ்யா மீதான காதலில் உறுதியாக இருக்கும் பார்த்தி என அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை தந்த இந்தத் தொடர் தற்போது அவர்கள் இருவரையும் இணைத்துள்ளது.

காவ்யாவின் திருமணத்திற்கு முந்தைய காதல் குறித்து தெரிந்துக் கொள்ளும் அவரது மாமியார், தன்னுடைய மகனுடன் காவ்யா இணைவதை தடுக்க பல்வேறு திட்டங்களை வகுக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மையை தெரிந்துக் கொள்ளும் அவர், காவ்யா -பார்த்தி இணைய தானே காரணமாகிறார். இருவருக்கும் முதலிரவையும் ஏற்பாடு செய்கிறார். தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பலமுறை காவ்யா காலில் விழும் பார்த்தி, முதலிரவிலும் அதையே தொடர்கிறார்.

பால் சொம்புடன் முதலிரவு அறைக்குள் வரும் காவ்யா, அதை கீழே வைக்கப் போக, காலிலெல்லாம் விழ வேண்டாம் என்று கூறுகிறார் பார்த்தி. தான் ஒன்றும் காலில் விழவில்லை என்று கூறும் காவ்யா, ஏன் முதலிரவில் பெண்கள்தான் காலில் விழ வேண்டுமா என்று கேள்வியெழுப்ப, அதிலெல்லாம் தான் எந்த ஈகோவும் பார்ப்பதில்லை என்று கூறும் பார்த்தி, தொபுக்கடீர் என காவ்யா காலில் விழுந்து, தன்னை இறுதிவரை கண்கலங்காமல் அவர் பார்த்துக் கொள்வாரா என்று உறுதிமொழி வாங்கியபின்பே எழுகிறார்.

இதையடுத்து திரைப்பட பாடல்கள் நான்கு பின்புலத்தில் ஒலிபரப்பாக, இருவரும் மாறி மாறி பார்த்துக் கொள்கின்றனர். இதுதான் ரெமான்டிக் லுக்காம். இப்படியெல்லாம் இம்சை செய்யும் இயக்குநர், ஒருவழியாக காவ்யாவே பார்த்தியை பார்த்து இப்படியே பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறாரா என்று கேட்க வைக்கிறார். இதையடுத்து சுதாரித்துக் கொள்ளும் பார்த்தி, தான் இனிமேல் பேசப் போவதில்லை என்று கூறுகிறார்.

அடுத்தது ரொமான்ஸ் தான் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பாத்ரூமில் ஏதோ சத்தம் கேட்க, அதைப் போய் பார்க்கும் பார்த்தி ஷவரில் நனைந்து விடுகிறார். உடன் அங்கே வரும் காவ்யா, வழக்கம் போல வழுக்கிவிழ, அவரை பிடிக்கிறார் பார்த்தி. இவ்வாறாக அவர்களது ரொமான்சை துவக்கி வைக்கிறார் இயக்குநர். இந்நிலையில் நாளைய தினம் ஜீவாவின் முதலிரவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக எபிசோட் நிறைவடைகிறது. அதில் என்ன கூத்து செய்கிறார் இயக்குநர் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.