சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொன்னதாகவும், அதற்கு அவர் நோ சொல்லிவிட்டார் எனவும் கோலிவுட்டில் தகவல் ஒன்று பரவிவருகிறது.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறி பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
ரூ 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன்: கதை தேர்வில் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட அவர் அந்தப் பாதையில் சிறப்பாகவே பயணித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலரால் கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சி அப்படி கணித்தவர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது.
அடி வாங்கிய பிரின்ஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். இரண்டு படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. பிரின்ஸ் பட தோல்வி சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
மாவீரனில் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடியால் தனது அடுத்த அடியை நிதானமாகவும், கவனமாகவும் எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
டீலில் விட்ட சிவகார்த்திகேயன்?: இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனை மெரினா திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையை சொன்னாராம். ஆனால் அந்தக் கதையை கேட்டுவிட்டு சிவகார்த்தியேன நோ சொல்லிவிட்டாராம். இதனால் பாண்டிராஜ் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
சிவாவுக்கு பதில் விஷால்?: இதனையடுத்து அந்தக் கதையை பாண்டிராஜ் விஷாலிடம் கூறியதாகவும், விஷால் ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிராஜும், விஷாலும் ஏற்கனவே கதகளி என்ற படத்தில் பணியாற்றியிருக்கின்றனர். அந்தப் படம் தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விஷாலும் ஒரு வெற்றிக்கு வெயிட் பண்ணிக்கொண்டிருப்பதால் பாண்டிராஜ் மூலம் அந்த வெற்றி அவருக்கு கிடைக்குமா எனவும் திரையுலகில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.