தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. 1999ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தின் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார் த்ரிஷா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக கமிட்டானார்.
Sneha Prasanna: பொறாமைப்பட வைக்கும் சினேகா பிரசன்னா.. அப்போதும் இப்போதும்.. ரொமான்டிக் க்ளிக்ஸ்!
ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, ஆர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் த்ரிஷா.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் மூலம் த்ரிஷா விஜய் ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீணடும் இணைந்து நடிக்கிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Samantha: சமந்தா சிம்பத்தி ஸ்டார் ஆயிட்டாரு… அழுதா படம் ஓடிடுமா? பிரபலம் கேள்வி!
அடுத்ததாக த்ரிஷா நடிப்பில் வரும் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு பட புரமோஷனுக்காக சோழர்கள் டூர் மேற்கொண்டுள்ளனர். பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 படம் குறித்த புரமோஷன்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் நடிகை த்ரிஷா. த்ரிஷா பொன்னியின் செல்வன் 2 பட புரமோஷன்களில் பங்கேற்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Trisha: சோழர் குல பேரழகி… ‘குந்தவை’ த்ரிஷாவின் அசத்தல் போட்டோஸ்!
இந்நிலையில் த்ரிஷாவின் டிவிட்டர் பக்கத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். காரணம், த்ரிஷாவின் டிவிட்டர்பக்கத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பெயரை குந்தவை என மாற்றியுள்ளார்.
பெயரை குந்தவை என மாற்றியதும் அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷாக் ஆன நடிகை த்ரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே த்ரிஷ் என மாற்றியுள்ளார். ஆனாலும் அவருக்கு ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படவில்லை. இதேபோல் ஜெயம் ரவியும் தனது பெயரை அருண்மொழி வர்மன் என மாற்றியுள்ளார். இதனால் அவரது ப்ளூ டிக்கும் பறிக்கப்பட்டுள்ளது.
Jyothika: ஜோதிகா மீண்டும் நடிக்க வந்ததன் ரகசியம் இதுதான்… அம்பலப்படுத்திய பயில்வான்!
டிவிட்டர் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உங்களின் படங்களை பார்த்த பிறகுமா ப்ளூ டிக்கை நீக்கியிருக்கிறார்கள்? கவலைப்படாதீர்கள் உங்களுக்கு கோல்டன் டிக்கே கிடைக்கும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.