Vivek : மரங்களை வளர்த்து அறம் செய்த கலைஞன்.. சின்ன கலைவாணர் விவேக்..இரண்டாமாண்டு நினைவு தினம்!

சென்னை : சின்னக்கலைவாணர் நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயரமான நாளில் அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்ட விவேக் 2021ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

அவர் மறைந்தாலும் அவரது கருத்துக்களாலும், திரைப்படங்கள் மூலமும் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருக்கிறார்.

நடிகர் விவேக் : நகைச்சுவை காட்சி என்றாலே ஒருவரின் உருவத்தை கேலி செய்வதும், ஒருவரை அடித்து துன்புறுத்துவதுமாகவே இருந்து வந்தது. இதை மக்களும் ரசித்துப்பார்த்து மகிழ்ந்தனர். இந்த போக்கை சாதுர்யமாக மாற்றிக்காட்டினார் நடிகர் விவேக். இவர் திரையில் காட்டியது நகைச்சுவை மட்டும் இல்லை, ஒரு சமூகத்தை சீர் திருத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

விவேக்கிற்கு ஏன் அக்கறை : உண்மையில் விவேக் பேசியது நகைச்சுவை மட்டும் தானே, சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற அக்கறை விவேக்கிற்கு ஏன் ஏற்பட்டது, நகைச்சுவைத் தாண்டி விவேக் செய்த பணி என்ன என ஆராயத் தொடங்கினாலும் அந்த கேள்விக்கு விடையளிக்க முடியாது. தான் நேசிக்கும் சினிமாவிற்கு நேர் எதிராக பயணம் செய்து அதில் வெற்றியும் கண்டார் விவேக்.

Chinna kalaivanar actor viveks second death anniversary memorial day

பாலமாக அமைந்த படம் : ஒரு ஆபாசத்திற்கு ஒரு ஆபாசம் பதில் என்றால், ஒரு சமூகமே குப்பைமேடு ஆகிவிடும், அமைதியாக அதை கடந்து சென்றால் அது மங்கி மண்ணாகி விடும் என்ற உன்னதமான கருத்தைக்கூறிய விவேக். லஞ்சம், மூட நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, அரசியல் , ஊழல்கள் போன்ற பல கருத்துகளை தனது நடிப்பின் வாயிலாக எடுத்துக்கூறத் தொடங்கினார். விவேக் இந்த இலக்கை அடைவதற்கு பிரபு, கரண்,மனோரமா நடித்த திருநெல்வேலி திரைப்படம் பாலமாக அடைந்தது.இந்த படத்தில் இருந்ததான் சமூக கருத்துக்களை தனது படங்களில் பேசத் தொடங்கினார் விவேக்.

முன்னணி நடிகர்களுடன் : இதையடுத்து தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, மாதவன், தனுஷ் உள்ளிட்ட ஏராளமான இளம் கதாநாயர்களுடன் இணைந்து நடித்து பெயர் எடுத்தார். முன்னாள் குடியரசுத்தலைவருமான அப்துல் கலாம் அவர்களின் தீவிர பற்றாளரான விவேக்,அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் எனக்கூறி இத்திட்டத்தினை செயல்படுத்தி வந்தார்.

Chinna kalaivanar actor viveks second death anniversary memorial day

இரண்டாம் ஆண்டு நினைவு தினம் : படங்களில் காமெடியானாக இருந்தாலும் ரியல் லைபில் கதாநாயகனாக ஜொலித்துக்கொண்டிருந்த இந்த நட்சத்திரம் கடந்த 2021ம் ஆண்டு இதே நாளில் தனது ஜொலிப்பை நிறுத்திக்கொண்டது தான் வேதனையிலும் வேதனை. அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை அவரது ரசிகர்கள் கண்ணீருடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.