மும்பை: இந்தியாவின் முதல் பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோரை, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மும்பையில் திறந்து வைத்தார்.
ஆப்பிள் நிறுவனம் தமிழகம் உட்பட சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இங்குள்ள சந்தை வாய்ப்பை பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவில் பிரத்யேக ஸ்டோரை திறக்க முடிவு செய்தது. இந்தியாவில், இந்த நிறுவனம் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் பிரத்யோக ஸ்டோரை அமைத்து உள்ளது.
இதனை ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ., டிம் குக் திறந்து வைத்தார். ஸ்டோர் திறக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த ஏராளமானோர் கைகளை தட்டியும், கரகோஷம் எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் டிம் குக்குடன் செல்பி எடுத்து கொண்டனர்.
மேலும், வரும் வியாழன் அன்று தலைநகர் டில்லியில் மற்றொரு ஸ்டோரை திறக்க உள்ளது. இது முடிந்ததும் டிம் குக், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement