சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட்டில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் M சீரிஸ் வரிசையில் எம்14 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த போன் உக்ரைனில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாகவே இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்பட்டது. தற்போது அது நடந்துள்ளது. வரும் 21-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி+ ரெஸல்யூஷன்.
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- சாம்சங்கின் Exynos 1330 ப்ராசஸர்
- 50+2+2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் மூன்று கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 6,000mAh பேட்டரி
- 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 4ஜிபி வேரியண்ட் விலை ரூ.13,490
- 6ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,990
Get ready for the Monster giveaway! This is your chance to win* 14 #GalaxyM14 5G smartphones, every day, for the next 14 days. Excited? Stay tuned and keep checking this space to know more. *T&C apply. #Monster5G #Samsung pic.twitter.com/wLlFdEg08b
— Samsung India (@SamsungIndia) April 17, 2023