வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கர்த்துாம்: சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 200 பேர் பலியாகினர். மேலும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். ராணுவத்திற்கு இடையே மோதல், தொடர்ந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே பல இடங்களில் துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவம் – துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில், இதுவரை பொதுமக்கள் உள்பட 200 போ் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 ஆயிரத்துக்கும் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
சண்டையை நிறுத்தணும்:
சூடான் நிலவரம் தொடா்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை நடந்தது. அப்போது, இருதரப்பும் சண்டையை நிறுத்தி பேச்சுவாா்த்தைக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement