கார்ட்டோம்:
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை அடுத்து, இரவு பகலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த பயங்கர மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பலி எண்ணிக்கை 2000-ஐ தாண்டி இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக சூடான் விளங்குகிறது. இங்கு அதிபர் அல் பஷீர் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த சூழலில், சூடான் ராணுவமும், துணை ராணுவமும் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டன.
அரசுப் படையினருக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவம் வெற்றி பெற்று கடந்த 2021-இல் ஆட்சியை கைப்பற்றியது. சூடான் ராணுவத் தலைமை தளபதி அப்தெல் ஃபட்டாவும், துணை ராணுவத் தளபதி முகமது ஹம்தான் ஆகியோர் ஆட்சியில் அமர்ந்தனர்.
ராணுவம் vs துணை ராணுவம்
ஆனால், இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. ராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டா எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு உடன்பட மறுத்தார் முகமது ஹம்தான். இவ்வாறு மோதல் போக்கு நீடிக்கவே, துணை ராணுவத்துக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் ராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டா இறங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவம் கிளர்ச்சியில் ஈடுபட, பெரும் மோதல் வெடித்தது. கடந்த சனிக்கிழமை சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை தொடங்கியது.
சிதறி கிடக்கும் மனித உடல்கள்
சூடானில் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திலும், ஊர்களிலும் ராணுவ வீரர்களும், துணை ராணுவத்தினரும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகிய ஆயுதங்களை கொண்டு இரு தரப்பினரும் மோதிக் கொள்கின்றனர். மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், தெருக்களிலும் இந்த சண்டை நடைபெறுவதால் பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். ஏவுகணை தாக்குதலில் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் சிதறி கிடப்பதை பார்க்க முடிகிறது.
‘டீன் ஏஜ்’ மாணவர்களுடன் பள்ளியிலேயே ‘செக்ஸ்’.. கையும் களவுமாக சிக்கிய 6 ஆசிரியைகள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
4 நாட்களாக நடைபெறும் இந்த மோதலில் பொதுமக்களுடன் சேர்த்து 200 பேர் உயிரிழந்திருப்பதாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அங்கு 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல, 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ராணுவம் – துணை ராணுவம் இடையேயான மோதலால் மருந்துகளுக்கும், உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு மருந்து இல்லாமலேயே பலர் உயிரிழந்து வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
சர்வதேச ஊடகங்களின் காண்பிக்கப்படும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. குழந்தைகளும், பெண்களும் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைகளுக்கு தூக்கிச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், இந்த மோதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார். சூடானில் இந்தியர்களும் கணிசமாக இருப்பதால் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், இந்தியர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. உதவிக்கு 1800 11 8797, +91-11-2301 2113, +91-11-2301 4104, 91 99628291988 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.