தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? ரேஸில் இணைந்த சஞ்சய் அரோரா… லிஸ்டில் மொத்தம் 11 பேர்!

தமிழ்நாட்டின் டிஜிபியாக பதவி வகித்து வரும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இதன்மூலம் 36 ஆண்டுகால காவல்துறை பணியை நிறைவு செய்கிறார். இவர் கடந்த 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். முதல்வர்

தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததும், கடந்த மே 2021ல் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில் ஓய்விற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி

இந்நிலையில் அடுத்த டிஜிபி யார் என கடந்த சில மாதங்களாகவே தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் தகுதி வாய்ந்த அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மூவரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும்.

டிஜிபி ரேங்கில் 11 பேர்

தற்போதைய சூழலில் அடுத்த டிஜிபி யார் என்பதை தீர்மானிப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. ஏனெனில் பலரும் ரேஸில் இணைந்துள்ளனர். குறிப்பாக 1989 பேட்ச்சை எடுத்துக் கொண்டால் டிஜிபி ரேங்கில் 4 பேர் தற்போது காவல்துறை பணியில் இருக்கின்றன. ஆனால் மூன்று பேர் பல்வேறு காரணங்களால் தகுதி பெற வாய்ப்பில்லை எனச் சொல்லப்படுகிறது. அதில், பி.கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருக்கிறார். இவர் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.

பி.கந்தசாமி விரைவில் ஓய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்த 6 மாத காலப் பணி எஞ்சியிருக்கும் நபரையே டிஜிபியாக தேர்வு செய்ய முடியும். அப்படி பார்த்தால் பி.கந்தசாமிக்கு வாய்ப்பு இல்லை. அடுத்து பிரமோத் குமார். இவர் செப்டம்பர் 30, 2025ல் ஓய்வு பெறுகிறார். மாநில போக்குவரத்து திட்ட பிரிவு (STPC) ஐஜியாக இருக்கும் இவரது பதவி உயர்வு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு வாய்ப்புகள் இல்லை.

சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் புகார் காரணமாக மார்ச் 18, 2021ல் இருந்து பணியிடை நீக்கத்தில் உள்ளார். இதனால் இருவருக்கு வாய்ப்பில்லை. அடுத்து பிராஜ் கிஷோர் ரவி டிசம்பர் 31, 2023ல் ஓய்வு பெறுகிறார். எனவே இவர் டிஜிபி ரேஸில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதையடுத்து 1990 பேட்ச்சில் டிஜிபி ரேங்கில் 6 பேர் இருக்கின்றனர். அதில் முதன்மையான நபராக இருப்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால். இவர் ஆகஸ்ட் 31, 2025ல் தான் ஓய்வு பெறுகிறார்.

டெல்லி டூ சென்னை

இந்த சூழலில் டெல்லி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு டிஜிபிக்கான ரேஸில் இடம்பெற விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழ்நாடு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இருப்பினும் டெபுடேஷன் அடிப்படையில் டெல்லியில் பணி வழங்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு திரும்பலாம்.

சஞ்சய் அரோரா விருப்பம்

அந்த வகையில் சஞ்சய் அரோரா டிஜிபி ரேஸில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே மொத்தம் 11 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தால் அதிலிருந்து சங்கர் ஜிவால், சஞ்சய் அரோரா, பிராஜ் கிஷோர் ரவி ஆகிய மூவர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.