தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீர் பருக வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா நேற்றைய தினம் (17) தெரிவித்துள்ளார்.
“தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான கால நிலையினால் உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும் இதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்வது நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்த வேண்டும் அத்துடன், போதியளவு நீராகாரங்களை அருந்துங்கள்.
நீர் தன்மையுள்ள வெள்ளரி, கெக்கரி போன்ற பழங்களை உண்ண வேண்டும் எனவும் பிரதிப்பணிப்பாளர் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.