"இறுதிவரை கைவிட மாட்டேன் என்றாயே".. அந்தரத்தில் கணவனின் கை நழுவிய "அந்த நொடி".. சர்க்கஸில் விபரீதம்

பெய்ஜிங்:
சீனாவில் சர்க்கஸ் ஒன்றில் நடந்த விபரீதம் அனைவரையும் நடுநடுங்க செய்திருக்கிறது. ஒரு நொடியில் கணவனின் கை நழுவியதால் பல நூறு அடி உயரத்தில் இருந்து மனைவி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் காண்போரின் நெஞ்சை உருக்கியது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் உள்ள ஹவுகாய் நகரில் கடந்த ஒரு மாதக்காலமாக பிரம்மாண்ட சர்க்கஸ் நடைபெற்று வந்தது. சீனாவில் சர்க்கஸ் என்றால் நம்மூரில் நடைபெறுவதை போல சாதாரணமாக இருக்காது. மிக ஆபத்தான விளையாட்டுகளும், குரூரமான விலங்குகளை சீண்டி அதில் இருந்து தப்பிக்கும் விதமான சாகசங்களும் இடம்பெறும். இதனால் இந்த சர்க்கஸை காண ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருவார்கள்.

இந்த சர்க்கஸில் ஜிம்னாஸ்டிக் கலைஞர்களான ஜங் மோமோ, அவரது சன் மோமோ பல நூறு அடி உயரமுள்ள அந்தரத்தில் வெறும் கயிறுகளில் ஆடும் சாகச விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த தம்பதியரின் சாகசத்தை காணவே தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதால், எப்போதும் சர்க்கஸுக்கு இறுதியில் இந்த சாகசம் இடம்பெறும்.

100 அடி உயரத்தில் சாகசம்

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை இரவு சர்க்கஸ் முடியும் போது மோமோ தம்பதியரின் சாகசம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் அவர்களின் சாகசம் தொடங்கியது. சுமார் 100 அடி உயரத்தில் 5 கயிறுகள் மட்டுமே தொங்கவிடப்பட்டிருந்த நிலையில், அவர்களின் வழக்கமான மெய்சிலிர்க்கும் சாகசங்கள் ஆரம்பமாகின. ஒவ்வொரு கயிறாக மாறி மாறி அந்தரத்தில் குட்டிக்கரணம் அடித்தபடி கணவன் – மனைவி சாகசத்தில் ஈடுபட்டனர்.

“பகலில் போலீஸ்… இரவில் கிட்னாப்பர்ஸ்”.. கடும் பஞ்சத்தால் தடம் மாறிய பாகிஸ்தான் போலீஸார்.. என்ன நடக்கிறது..?

மிஸ் ஆன ‘டைமிங்’

அந்த வகையில், ஒரு கயிற்றில் இருவரும் சுழன்று கொண்டிருந்த போது, மனைவி சன் மோமோ கையை விட வேண்டும்.. அப்போது கணவன் ஜங் மோமோ, சட்டென அந்தரத்தில் குட்டிக்கரணம் அடித்து மனைவியின் கையை பிடிக்க வேண்டும். இதுதான் டைமிங்.. ஆனால், துரதிருஷ்டவசமாக கணவன் ஜங் மோமோ குட்டிக்கரணம் அடிக்க ஒரு நொடி தாமதமானது. இதனால் மனைவியின் கையை அவரால் சரியான நேரத்தில் பிடிக்க முடியவில்லை. இதில் 200 அடி உயரத்தில் இருந்து விழுந்த சன் மோமோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

பெரும் சோகம்

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். அவரது கணவர் ஜங் மோமோ, என்ன செய்வதென தெரியாமல் கயற்றில் தொங்கியபடியே கண்ணீர் விட்டு கதறினார். அவரது இரண்டு சிறு குழந்தைகளும் தாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அழுது புரண்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சன் மோமோ உயிரிழந்தார். சர்க்கஸில் நடந்த விபரீத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.