கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு வாய்ப்பு உள்ள தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்காமல் அனைத்து இடங்களிலும் பாஜக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அதிமுக-வுக்கு செல்வாக்குள்ள கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய தமிழர்கள் அதிகம் வாழும் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]