“சனாதன தர்மத்தாலே எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாகும்!" – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியா, சுழற்சி அடிப்படையில் ஜி-20 குழுவின் தலைமை பொறுப்பை ஏற்ற நாள்முதல், `இந்த உலகம் ஒரே குடும்பம். இந்தியாவே அதன் உலக தலைவர் (விஸ்வகுரு)’ என்ற முழக்கத்தை பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முழங்கிவருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாதான் எதிர்கால வல்லரசு என ஒட்டுமொத்த உலகமுமே கூறுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், “இந்தியா, உலகத் தலைவராவதற்கான பாதியில் சென்றுகொண்டிருக்கிறது. அந்த இலக்கை நாம் அடைய வேண்டும். இந்தியாவே எதிர்கால வல்லரசு.

இதனை நாங்கள் மட்டும் கூறவில்லை, இந்த ஒட்டுமொத்த உலகமுமே கூறுகிறது. இந்த உலகம் தன் அதிகாரத்தை நிலைநிறுத்தப் போர் செய்துகொண்டிருந்தபோது, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் மருந்தளித்தோம். இந்து ராஷ்டிரமும், இந்து பாரம்பர்யமுமே சனாதன தர்மம். இதன் காரணமாகத்தான் எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாகும்.

மோகன் பகவத்

ஆனால் இதில், வலிமையில்லாமல் மதிப்பிருக்காது. மேலும், நம் பலம் என்பது மற்றவர்களுக்கு வலி தருவதாக இருக்காது. மாறாக, அமைதிக்கானதாகவும், பலவீனமானவர்களை பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கும். நாங்கள் யாரையும் வெல்லவோ, மதம் மாற்றவோ செய்யமாட்டோம். தர்மத்தின் பக்கம் நிற்போம். அப்போதுதான் இந்திய வல்லரசாகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.