மத்தியப் பிரதேச மாநிலம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூர் மண்டலத்தில் உள்ள ஷாதோல் துணை மண்டலத்தில் சிங்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.15 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் வந்து கொண்டிருந்தன. இவை எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டதில் ஓட்டுநர் ஒருவர் பலியானார்.
சரக்கு ரயில் விபத்து
6 ரயில்வே அதிகாரிகள், ஒரு ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அதில் சரக்கு ரயில்களின் எஞ்சின்கள் தீப்பற்றிக் கொண்டன. இதனால் பதற்றம் அதிகரித்தது. உடனடியாக தீயை அணைக்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து பற்றி ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகள் விசாரணை
விபத்திற்கான பின்னணி குறித்து முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் வட இந்தியாவில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கட்னி மற்றும் பிலாஸ்பூரில் இருந்து வரும் ரயில்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
சிங்பூர் ரயில் நிலையம்
சிங்பூர் ரயில் நிலையம் அருகே அலகாபாத், வாரணாசி, தீன் தயாள் உபாத்யாய், கட்னி, ஜபல்பூர், பிலாஸ்பூர், சாட்னா, ராய்ப்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. எனவே இந்த ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்களின் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
நேரம் மாற்றி அமைக்கப்பட்ட ரயில்
பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்ட ரயில்கள்