புதுடில்லி,’ வெளிநாட்டு நன்கொடையில் விதி மீறல் ஈடுபட்டதாக ஆக்ஸ்பேம் நிறுவனம் மீது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறும் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆக்ஸ்பேம்’ இந்தியா என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்திய பிரிவு, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ., நடத்திய வி வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில், இந்த நிறுவனம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்தின் உரிமத்தை 2022, ஜனவரியில் மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து்ள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement