சென்னை: நானியின் கேங் லீடர் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா மோகன் பல படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் அடுத்ததாக டோலிவுட்டில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே #PriyankaMohan ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் தீயாக டிரெண்டாகி வருகிறது.
அழகு செல்லம்மா பிரியங்கா மோகன்: கன்னடத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் 2019ல் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோயினாகவே தென்னிந்தியாவில் மாறிவிட்டார். டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் வேறலெவலில் ஹிட் அடித்த நிலையில், ரசிகர்கள் இவரை செல்லமாக செல்லம்மா என்றே அழைத்து வருகின்றனர்.
தமிழில் தாறுமாறு வளர்ச்சி: கன்னடம், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் படத்தில் என்ட்ரி கொடுத்த நிலையிலேயே முதல் படமே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ். மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் அவர் இணைந்து நடித்த டான் திரைப்படமும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.
சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் படு போல்டான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கு நல்லா நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்து இருந்தார்.
கேப்டன் மில்லர்: சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வந்த பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பீரியட் போர்ஷனில் வேறு ஒரு ஷேடில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், மீண்டும் டோலிவுட்டில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

புளியங்கொம்பை பிடித்த பிரியங்கா மோகன்: இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் ஓஜி என அழைக்கப்படும் பவன் கல்யாணின் பிரம்மாண்டமான படத்தில் பிரியங்கா மோகன் ஆன்போர்ட் ஆகி உள்ளார் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
நடிகை பிரியங்கா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். தமிழில் அடுத்ததாக கவினுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகர் பவன் கல்யாண் சமுத்திரகனி உடன் இணைந்து வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு வெர்ஷன் மற்றும் ஹரிஹர வீர மல்லு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், மும்பையில் தொடங்கி உள்ள ஓஜி படத்தின் படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.