முன்னாள் மனைவி மற்றும் அவரது காதலருடன் டின்னருக்கு சென்ற ஹிரித்திக் ரோஷன்

பாலிவுட் திரையுலகின் முக்கிய நட்சத்திரமான ஹிரித்திக் ரோஷன் தன் மனைவி சூசனுடனான திருமண வாழ்க்கை முடிவதாக கடந்த 2013 டிசம்பரில் அறிவித்தார். 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹிரித்திக் மற்றும் சூசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் விவாகரத்துக்கு பின்னரும் தாங்கள் இருவரும் இன்னும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் இருப்பதாக பல சமயங்களில் சூசன் கூறி வந்துளார். சூசனிடம் இருந்த தனது இரண்டு மகன்களையும் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார் ஹிரித்திக் ரோஷன்.

இதற்கிடையே கடந்த 2020ல் கொரோனா அலை பரவிய சமயத்தில் தனது குழந்தைகள் தன்னை காணாமல் தவிப்பார்களே என நினைத்த ஹிரித்திக் தனது முன்னாள் மனைவி சூசனையும் மகன்களையும் தன்னுடைய வீட்டிலேயே வந்து தங்குமாறு கூறி அழைத்து அழைத்துச் சென்றார். குழந்தைகளின் நலனை மனதில் வைத்து சூசனும் எந்த மறுப்பும் சொல்லாமல் உடன் சென்றார். ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் விதமாக ஹிரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியை எந்த அளவிற்கு மதிப்பு கொடுத்து நடத்துகிறார் என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது.

இரவு நேரம் டின்னர் சாப்பிடுவதற்காக தனது முன்னாள் மனைவி சூசன் மட்டுமல்லாமல் அவரது பாய் பிரண்டையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றுள்ளார் ஹிரித்திக் ரோஷன். தான் முன்னதாகவே சாப்பிட்டு முடித்து விட்டதால் வெளியே வந்து காருக்கு அருகில் நின்றபடி அவர்கள் இருவரும் வருவதற்காக காத்திருந்தார் ஹிரித்திக் ரோஷன். பின்னர் சூசனும் அவரது பாய் பிரண்டும் வந்த பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.