Thalapathy 68: தளபதி 68 இயக்குநர் அட்லியே: விஜய் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். அந்த பட வேலையே இன்னும் முடியாத நிலையில் தளபதி 68 பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
லோகேஷை அடுத்து தம்பி அட்லி இயக்கத்தில் நடிப்பார் விஜய் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும் அது பிடித்துப் போன தளபதி, நாம் அடுத்து படம் பண்ணுகிறோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அய்யய்யோ கோபிசந்த் வேண்டாம் தளபதி. அவர் ஸ்டைல் வேறு, உங்கள் ஸ்டைல் வேறு. செட்டாகாது. அது மட்டும் வேண்டவே வேண்டாம் அண்ணா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Vijay:வாவ், வீரசிம்ஹா ரெட்டி இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்?: தளபதிக்கு ஒரு ஹிட் பார்சல்

கோபிசந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம். ஜவான் படத்தில் பிசியாக இருக்கும் அட்லிக்கு தளபதி படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை செய்து முடிக்க குறைந்தது மூன்று மாதமாவது தேவைப்படுமாம்.

அட்லி தயாராவதற்குள் கோபிசந்த் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்றார்கள். ஆனால் கோபிசந்த் இல்லை தளபதி 68 படத்தை இயக்கப் போவது அட்லி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.

தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அடுத்து அட்லி, விஜய் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேரும் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆவலாக இருக்கிறதாம். அதே சமயம் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும் தளபதி 68 படத்தை தயாரிக்க விரும்புகிறதாம்.

விஜய் தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 140 கோடி கொடுக்க சன் பிக்சர்ஸ் தயாராக இருக்கிறதாம். மேலும் அட்லிக்கு ரூ. 60 கோடி கொடுக்க முன் வந்திருக்கிறதாம்.

தளபதி 68 படத்தை அட்லி தான் இயக்கப் போகிறார். அதனால் அந்த படம் பற்றி பேசாமல் விஜய்ணா நடித்து வரும் லியோ படம் பற்றி மட்டும் தற்போதைக்கு பேசுங்கள். லியோ மீதான ஹைப்பை குறைக்க வேண்டாம் தளபதியன்ஸ் என விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்று பல இயக்குநர்கள் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த அட்லிக்கு மட்டும் எப்படிப்பா விஜய்ணா கால்ஷீட் அடிக்கடி கிடைக்கிறது?. மச்சக்காரன் தான் அட்லி. இல்லைனா விஜய்ணா இப்படி அடுத்தடுத்து வாய்ப்பு கொடுப்பாரா என்கிறார்கள் ரசிகர்கள்.

லியோ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அடுத்ததாக ஹைதராபாத்தில் சில காட்சிகளை படமாக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் தான் மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்ய லியோவில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார் த்ரிஷா.

Leo: ஆர்டர் போட்ட லியோ லோகேஷ் கனகராஜ்: பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ‘குந்தவை’த்ரிஷா

அவர் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் லியோ அப்டேட் கேட்கிறார்கள் ரசிகர்கள். லியோ பற்றி எதுவும் சொல்லக் கூடாது என லோகேஷ் கறாராக கூறியிருப்பதால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் த்ரிஷா.

த்ரிஷா மேடைக்கு வந்தாலே அவரை பேசவிடாமல் லியோ, லியோ, லியோ என கோஷமிடுகிறார்கள் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.