வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: இந்த ஆண்டின் முதல் அரிய வகை சூரிய கிரகணம், இன்று(ஏப்.,20) நிகழ்ந்தது. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெளிவாக தெரிந்ததை அங்குள்ள மக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர். இச்சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை.
சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என நான்கு வகையான சூரிய கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதன்படி, 400 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரியகிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு துவங்கிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என ஏற்கனவே அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை அங்குள்ள மக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement