சோதித்த ருத்ரன்.. என்னோட 110 ரூபாயை திருப்பிக் கொடுங்க.. பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் ரகளை!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு வரிசையாக படங்கள் வெளியானாலும் அவரை மகிழ்ச்சிப்படுத்தும் அளவுக்கோ அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் அளவுக்கோ படங்கள் வெளியாகவில்லை.

சிம்புவின் பத்துதல, ஜெயம் ரவி உடன் அகிலன் மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என வரிசையாக 3 படங்களில் பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின்.

ஆனால், அந்த படங்கள் வெளியாகி ஹிட் அடிக்காத நிலையில், சமீபத்தில் ருத்ரன் படத்தை பார்த்து நொந்துப் போன ரசிகர் ஒருவர் டிக்கெட் விலையை திருப்பிக் கொடுங்க என இன்ஸ்டாகிராமில் பிரியா பவானி சங்கருக்கு போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நீச்சல் குளத்தில் பிரியா பவானி சங்கர்: சம்மர் வெயிலை சமாளிக்க முடியாமல் சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு சினிமா மூலம் தான் ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடியவில்லை. அட்லீஸ்ட் இன்ஸ்டாகிராம் மூலமாகவாவது திருப்திப்படுத்தலாமே என பதிவிட்டுள்ளார்.

ஹோம்லி லுக்கிலேயே பிரியா பவானி சங்கரை பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென பிரியா பவானி சங்கரை பிகினியில் பார்த்த நிலையில், செம ஹாட் என்றும் நம்ம பிரியா பவானி சங்கரா இவரு என்றும் கமெண்ட்டுகளை போட்டுத்தாக்கி அவரது அழகை ரசித்து வருகின்றனர்.

டிக்கெட் காசை திருப்பிக் கேட்ட ரசிகர்: ஆனால், பிரியா பவானி சங்கரை பிகினியில் பார்த்தும் வர்ணித்து கமெண்ட்டுகளை போடாமல் ஒரு நெட்டிசன் ருத்ரன் படத்தை உங்களை நம்பித்தான் போய் பார்த்தேன். முடியல.. தயவு செஞ்சு என்னோட 110 ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுங்க என தனது போன் நம்பரையும் பதிவிட்டு ஜிபே பண்ண சொல்லி உள்ள கமெண்ட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

அதுக்குத்தான் இது: ருத்ரன் படத்திற்கு நீ கொடுத்த 110 ரூபாய்க்கு இந்த ஒரு பிகினி போட்டோ போதும் வச்சிக்கோ என பிரியா பவானி ரசிகர்கள் அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், பொதுவெளியில் இப்படி போன் நம்பரை போடாதே, யாராவது மிஸ்யூஸ் பண்ணிடுவாங்க என அந்த ரசிகருக்கு பலரும் அட்வைஸ் பண்ணி வருகின்றனர்.

Fan asks Priya Bhavani Shankar to return his ticket price after Rudhran movie upsets him

இந்தியன் 2 வருது: எஸ்.ஜே. சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த பொம்மை திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும், டிமான்டி காலனி 2, ஜீப்ரா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் பிரியா பவானி சங்கருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.