மருத்துவர் வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை; கொள்ளையன் சிக்கியது எப்படி?

​திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த​ அண்ணா நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (55). இவர் பழனி​ ​​அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி பெயர் ரேவதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மக​ள் இருக்கிறார். ​மகள் சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் மகளைப் பார்ப்பதற்காக ரேவதி சென்னைக்குச் சென்றுவிட்டார்.

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்

​வழக்கம்போல மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உதயகுமார் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை ​அவர் ​வீட்டி​ன் ஜன்னல் கதவுகளை உடைத்துக்கொண்டு முகமூடி அணிந்த மர்மநபர்கள்​ நுழைந்திருக்கின்றனர். அவர்கள் உதயகுமாரைக் கத்தியால் தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடி​ச்​ சென்றனர். ​மருத்துவர் உதயகுமாரின் வீட்டு சுற்றுச்சுற்றுவர் 10 அடி உயரம் கொண்டது. மேலும் வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும் பெரிய சுவரை ஏறி குதித்து கொள்ளையடித்துவிட்டு வீட்டின் கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருந்தனர். ​​​

மருத்துவர் உதயகுமார் கைவிரல் அறுக்கப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தில் 100​ ​சவரன் தங்க நகைகள், 20​ ​கிலோ வெள்ளிப் பொருள்கள், 24​ ​லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் ​கொள்ளைச் சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.  

கைதான சரவணக்குமார்

​இதில் ​​பழனி​யைச் ​சேர்ந்த சரவண​க்குமார் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து உருக்கப்பட்ட நிலையில் 34​ ​கிராம் எடைகொண்ட மூன்று தங்க பிஸ்கட்டுகள், வெள்ளிப் பொருள்கள், 7​ ​லட்சம்​ ​ரூபாய் பணம் ஆகியவற்றை போலீ​ஸார் கைப்பற்றினர். மேலும் தங்க நகைகளை உருக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கார், 3​ ​இருசங்கர வாகனங்களும், பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரையும் போலீ​ஸார் தேடிவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.