வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கராச்சி: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வரும் மே 4-ம் தேதி இந்தியா வருகிறார். 2014-ல் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது அவர் இந்தியா வந்தார். அதன்பின்னர் இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய அளவில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, 2021 அக்டோபரில் இந்தியா ஏற்றது. இந்தாண்டு கோவாவில் மே மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.
இதற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், நமது அண்டை நாடான பாகிஸ்தான், சீனாவுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ மே மாதம் 4ம் தேதி இந்தியா வருகிறார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அரசு உயர் தலைவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். கடைசியாக 2014ம் ஆண்டு பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement