இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன்.. ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.. அமெரிக்க அதிசயம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
அமெரிக்க மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன், மீண்டும் உயிர்தெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

உங்க உடல் வலிமையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது?

உடற்பயிற்சி

உடலை கட்டுக் கோப்பாக வைக்கும் மனப்பான்மை தற்போது இளைஞர்களிடையே பெருமளவு அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்பாலினத்தவர்களை கவர்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் உடற்பயிற்சி கூடங்களுக்குச் (gym) செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவீன உணவு வகைகளால் ஏற்படும் உடல் பருமன், அதனால் ஏற்படும் இதயம் சார்ந்த நோய்களை தவிர்க்க உடற்பயிற்சி கூடங்கள், இன்றைய வாழ்க்கையில் அவசியமாக உள்ளது.

ஆனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த டீன் ஏஜ் சிறுவன், திடிரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுவன் மீண்டும் உயிர் பிழைத்தது அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான சம்மி பெர்கோ (Sammy Berko) என்ற சிறுவர், தனது குடியிருப்புக்கு அருகே இருந்த ஜிம்மில் ராக் கிளைம்பிங் என்ற வகையான உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

எப்புட்ரா

அப்போது திடிரேன மாரடைப்பு ஏற்பட்டதால், ஜிம் ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மாரடைப்புக்கு வழங்கப்படும் CPR சிகிச்சையை இடைவிடாமல் மருத்துவர்கள் வழங்கினர். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், பெர்கோ இறந்துவிட்டதாக சிறுவனின் தாய் ஜெனிஃபர் பெர்கோவிடன் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கென்யா: ‘இயேசு வர்ராரு வெயிட்பண்ணுங்க’.. நான்கு பேரின் உயிரை குடித்த போதகர்.!

அதைக் கேட்டு நொடிந்துபோன பெற்றோர்கள், சிறுவனின் உடலின் அருகில் சென்று உட்கார்ந்து, உடைந்த மனதுடன் சிறுவனது ஆன்மாவை வழியனுப்பி கொண்டிருந்தனர். இந்தநிலையில் இறந்ததாக கூறப்பட்டு 2 மணி நேரங்களுக்கு பிறகு சிறுவனின் உடல் அசைவதை கண்டு ஆச்சரியமடைந்த பெற்றோர், உடனே மருத்துவர்களை அணுகியபோது மருத்துவர்கள் ஷாக்.

அமெரிக்க அதிசயம்

அறிவியல் முறைப்படி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவர், மீண்டும் உயிர்த்தெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வைபோல் இதற்கு முன்பும், எப்போது தாங்கள் பார்த்ததில்லை, இது ஒரு அதிசயம் தான் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பெர்கோவின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்டபோது, எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியான சம்பவம் இது என தாய் ஜெனிஃபர் பெர்கோ தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.