திமுக தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பரம்பரை பணக்காரரான பிடிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி. இதனால் பணத்துக்கு ஆசைபடாமல் மிகவும் நேர்மையாக நடந்துகொள்பவராக பிடிஆர் உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இது ஒரு சில திமுக அமைச்சர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால் பிடிஆர் சமீபத்தில், கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை முறையாக கணக்கு செலுத்துவதில்லை, அதில் எனக்கு திருப்தி இல்லை என்று பொதுமேடையிலேயே பேசியிருந்தார். இதனால் திமுகவின் சில மூத்த அமைச்சர்கள் பிடிஆர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த சூழலில் அமைச்சர் பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியதாவது; உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாடிக்கொண்டுள்ளார்கள் என்று முடிகிறது.
தற்போது இந்த ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.