யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை செழுமை படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சின் யாழ் அலுவலகத்தில் நேற்று (20) கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை சிறப்பாக செயற்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, சாத்தியமான பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.