கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க ரூ. 100 கோடியில் புதிதாக சங்கிலி பகுப்பாய்வு மென்பொருள் வாங்கப்படும் என்று சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். என்.எப்.டி., ஸ்வாப்ஸ், பிளாஷ் லோன்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பிளாக் செயின் எனும் இந்த சங்கிலித்தொடர் குற்றங்களைக் கண்டுபிடிக்க தடயவியல் மென்பொருள்கள் பயன்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இதுபோன்ற சங்கிலி பகுப்பாய்வு மென்பொருள் வாங்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது […]
