சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை: பிரதமர் உத்தரவு| PM Holds Meeting To Review Situation Of Indians Stuck In Sudan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சூடான் விவகாரம் தொடர்பாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக துவக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ இடையே கடும் மோதல் வெடித்தது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். 72 மணி நேரம் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்ட போதிலும் கார்தூம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் இல்லாத நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும், இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது.

சூடான் நிலவரம் குறித்து, ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரசுடன் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

latest tamil news

இந்நிலையில், பிரதமர் மோடியும், உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். சூடானில் நிலவும் சூழ்நிலை, அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில், இந்தியர்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துவக்க வேண்டும். அவர்கள், பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். அங்கு நிலவும் சூழ்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.