தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வெளியூர் பயணங்களுக்கு மாணவர்களும், பெற்றோர்களும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு அந்த நாளிற்காக காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ரயில் சேவை ரத்து என்ற ஏமாற்றம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சரக்கு ரயில் விபத்து
அதாவது, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருவிற்கு பயணிகள் ரயில் மட்டுமின்றி சரக்கு ரயில்களும் சென்று கொண்டிருக்கின்றன. அதில் உரங்களை ஏற்றி சென்ற ரயில் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று (ஏப்ரல் 21) அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. ரயில் எஞ்சினில் இருந்து 3 முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கி விட்டது.
பெங்களூரு செல்லும் ரயில்கள்
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவத்தால் சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
இதேபோல் சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களும் வேறு வழித்தடத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரயில் எண் 16212 கொண்ட சேலம் – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 06278 கொண்ட தருமபுரி – பெங்களூரு, ரயில் எண் 06551 கொண்ட பெங்களூரு – ஜோலார்பேட்டை,
4 ரயில்கள் ரத்து
ரயில் எண் 066552 கொண்ட ஜோலார்பேட்டை – பெங்களூர் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பெங்களூரு – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் பகுதி அளவில் மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.
முன்னதாக கோடை விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அவற்றில்
முன்பதிவு தொடங்கியிருப்பதாக
தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்கால சிறப்பு ரயில்கள்
ரயில் எண் 06031, தாம்பரம் டூ திருநெல்வேலி, ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 என புதன்கிழமை மட்டும் இயக்கப்படும்.ரயில் எண் 06032, திருநெல்வேலி டூ தாம்பரம், ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 என வியாழன் மட்டும் இயக்கப்படும்.
ரயில் எண் 06044, திருவனந்தபுரம் டூ சென்னை எழும்பூர், மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 என புதன்கிழமை மட்டும் இயக்கப்படும்.ரயில் எண் 06043 சென்னை எழும்பூர் டூ திருவனந்தபுரம், மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 11, 29 என வியாழன் மட்டும் இயக்கப்படும்.