கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் திருமணமான இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சூர் சிரமனேங்காடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் மீது போலீசார் பாலியல் புகாரில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை குண்ணம்குளத்தில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த பின் புகைப்படங்களும், வீடியோவும் எடுத்துள்ளார்.
பின்னர் அந்த படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.