கார்ட்டோம்:
சூடானில் ராணுவம், துணை ராணுவத்துக்கு இடையே நடைபெற்று வந்த பயங்கர போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தராமையா கர்நாடகா காங்கிரஸின் கதாநாயகன் ஆனது எப்படி?
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்றான சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ளது. இங்கு அதிபர் அல் பஷீர் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.
இந்த சூழலில், சூடான் ராணுவமும், துணை ராணுவமும் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த 2021-இல் சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. சூடான் ராணுவத் தலைமை தளபதி அப்தெல் ஃபட்டாவும், துணை ராணுவத் தளபதி முகமது ஹம்தான் ஆகியோர் அங்கு ஆட்சி நடத்தி வந்தனர்.
நீயா நானா..?
ஆனால், இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை. ராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டா எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு உடன்பட மறுத்தார் துணை ராணுவத் தலைவர் முகமது ஹம்தான். இவ்வாறு மோதல் போக்கு நீடிக்கவே, துணை ராணுவத்துக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் ராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டா இறங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவம் கிளர்ச்சியில் ஈடுபட, பெரும் மோதல் வெடித்தது. கடந்த சனிக்கிழமை சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய சண்டை 6 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
பலியாகும் அப்பாவி மக்கள்
சூடானில் யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சண்டையாக இது மாறியதால், மூர்க்கத்தனமான தாக்குதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். நகரங்கள், கிராமங்கள் என சூடானின் அனைத்து பகுதிகளிலும் ராணுவமும், துணை ராணுவமும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்கின்றன. பீரங்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலமாக இரு தரப்பும் மோதிக்கொள்வதால் பொதுமக்களும் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். இதுவரை அங்கு 350 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பலி எண்ணிக்கை 5000-ஐ தாண்டும் என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.
“கதவ பூட்டலயா நீ”.. திடீரென திறந்த சர்க்கஸ் கூண்டு.. பார்வையாளர்கள் மீது பாய்ந்த சிங்கங்கள்.. என்னாச்சு?
பணிந்தது துணை ராணுவம்?
இதனிடையே, இந்த மோதலில் துணை ராணுவத்துக்குதான் அதிக சேதமும், இழப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், துணை ராணுவத்தினரிடம் ஆயுதக் கையிருப்பும் குறைந்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ராணுவத்திடம் துணை ராணுவம் பணிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், சூடானில் 72 மணிநேர போர் நிறுத்தம் அமலாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“சண்டையை கைவிட மாட்டோம்”
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜானுக்கு பிறகு மீண்டும் சண்டை தொடங்கும் என சூடான் ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சூடான் ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “துணை ராணுவம் ஒட்டுமொத்தமாக எங்களிடம் சரண் அடைய வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் சண்டையை கைவிடுவோம். இந்த 72 மணிநேர போர் நிறுத்தத்தை சரணடைவதற்கான அவகாசமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.