ஹைதராபாத்: தெலுங்கில் நானி நடித்துள்ள தசரா திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது.
நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.
தமிழில் சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை படங்களுடன் களமிறங்கிய தசரா, பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது.
ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்த தசரா தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
தசரா ஓடிடி ரிலீஸ் தேதி:தெலுங்கு நேச்சுரல் ஸ்டார் நானியின் தசரா திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா பட சாயலில் தான் தசரா படமும் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இரண்டு படங்களின் கதையும் வேறு வேறு தான், மேக்கிங் தான் வின்டேஜ் ஸ்டைலில் இருப்பதாக நானி ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இதனிடையே நானி, கீர்த்தி சுரேஷின் கெமிஸ்ட்ரியால் தசரா படத்தின் வசூல் ஒரே வாரத்தில் 100 கோடியை கடந்தது.
தெலுங்கில் உருவான தசரா, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் நான்கு மொழிகளிலுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக தமிழில் சிம்புவின் பத்து தல, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படங்களுக்கே பாக்ஸ் ஆபிஸில் தண்ணி காட்டியது தசரா. நானியின் ஆக்ஷன் சீன்ஸ் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் செய்தவர்களுக்கு சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தான் அது. திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தசரா படம், வரும் 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இதனால் தசரா படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்க ஓடிடி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். திரையரங்குகளை போல ஓடிடியிலும் தசரா படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசரா படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திகனி, சாய்குமார், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தசரா படத்தில் இடம்பெற்ற மைனர் வேட்டிக் கட்டி உள்ளிட்ட அனைத்து பாடல்கள் செம்ம ஹிட் அடித்தன. அதேபோல், சுவரில் வரையப்பட்டிருந்த சில்க் ஸ்மிதாவின் ஓவியமும் ட்ரெண்ட் ஆனது. தசரா படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர். மேலும், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதலாவுக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் தயாரிப்பாளர் பரிசாக கொடுத்தார்.