Laila, Thanu – ஹோட்டலில் எப்படிங்க பார்க்குறது.. பார்ப்பதை தவிர்த்த தயாரிப்பாளர்.. கோபப்பட்ட நடிகை லைலா

சென்னை: Laila, Thanu (லைலா, தாணு) ஹோட்டலில் பார்ப்பது சரியாக இருக்காது என நினைத்து பார்க்காமல் இருந்த தயாரிப்பாளர் தாணு மீது லைலா கோபப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் கலைப்புலி தாணு மிக மிக முக்கியமானவர். தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தான் தயாரிக்கும் படத்தை ஒருவர் எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமும் தாணுதான். ரஜினி நடித்த கபாலி படத்தை அவர் விளம்பரப்படுத்திய விதத்தை பார்த்து கோலிவுட் ஆச்சரியப்பட்டது. அதேபோல் ரஜினிக்கு முதல்முதலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்ததும் தாணுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் மட்டுமில்லை; இயக்குநர், இசையமைப்பாளர்: தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் தாணு. விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய புதுப்பாடகன் படம் நூறு நாள்கள் ஓடின. அதேபோல் அந்தப் படத்துக்கு இசையமைத்ததும் கலைப்புலி தாணுவே. இப்படி பல முகங்கள் கொண்ட தாணு கடைசியாக நானே வருவேன் படத்தை தயாரித்திருந்தார். அடுத்ததாக வாடிவாசல் படத்தை தயாரிக்கிறார்.

கோரிக்கை வைத்த பிரபுதேவாவின் அப்பா: கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு அனைத்து நடிகர்களுமே விருப்பப்படுவார்கள். ஏனெனில் அந்த பேனரில் நடித்தால் ஒரு கௌரவம் என்றே கருதப்பட்டது. நிலைமை இப்படி இருக்க பிரபுதேவாவின் அப்பாவான சுந்தரம் மாஸ்டர் ஒருமுறை தாணுவின் அலுவலகத்துக்கு சென்று, ‘தாணு நீங்கள் பிரபுதேவாவை வைத்து படம் ஒன்று எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். தாணுவும் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டார்.

சசி சொன்ன சொல்லாமலே: இதனையடுத்து இயக்குநர் சசி சொல்லாமலே கதையை தாணுவிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டுவிட்டார். ஆனால் ஒரு டிசைனில் கலைப்புலி தாணு பெயரை இரண்டாவதாக போட்டதை பார்த்து கோபமான பிரபுதேவா அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தாணு நேரடியாக பேசியும் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை பிரபுதேவா. இதனையடுத்து அந்தப் படம் வேறு ஒரு தயாரிப்பு பேனரில் லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஐபி படம்: இப்படிப்பட்ட சூழலில்தான் சபா என்ற இயக்குநர் விஐபி படத்தின் கதையை கூற தாணுவும் தயாரிக்க ஒத்துக்கொண்டார். பிரபுதேவாவும் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். அந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது அனைவரும் அறிந்தது. சிம்ரன், ரம்பா, பிரபுதேவா, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது லைலாதானாம்.

ஹோட்டலில் நடிகை; பார்க்க மறுத்த தயாரிப்பாளர்: லைலாவும் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டாராம். அவருக்கு பாம் க்ரோ ஹோட்டலில் ரூம் போடப்பட்டிருக்கிறது. படத்தின் பூஜை போடப்பட சில நாள்கள் இருக்கும்போது லைலாவுக்கான அட்வான்ஸை தனது மேனேஜர் மூலம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தாணு.

Laila got angry with the producer Thanu for he was not met laila

ஆனால் அதை வாங்க மறுத்த லைலா, ஏன் இதை உங்க தயாரிப்பாளர் வந்து கொடுக்கமாட்டாரா. ஹீரோயினை மதித்து பார்க்காதது என்ன புரொடக்‌ஷன் கம்பெனி என கேட்டிருக்கிறார். இந்த விஷயம் கலைப்புலி தாணுவின் காதுகளுக்கு போக, இந்த பொண்ணு ஆரம்பத்துலயே பிரச்னை பண்ணுது அவங்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம்.

இதனை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் தாணும். மேலும் அந்த பேட்டியில் எதுக்கு ஹோட்டலுல போய் பார்த்துக்குட்டு என்று நினைத்துதான் அன்றைய தினம் நான் போகவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.