Radha Iyengar: ‘அமெரிக்க வரலாற்றில் கோலோச்சும் இந்திய பெண்’.. யார் இவர்.?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துணை செயலாளராக இந்திய பெண்மணி ராதா ஐயங்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன்

அமெரிக்காவில் கோலோச்சும் இந்தியர்கள்

அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் பேர் வாழ்கின்றனர். வேலைக்காக சென்றவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்க குடிமக்களாக அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாக உள்ளது. அமெரிக்க தொழில்துறையில் பெரும்பான்மை தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் இந்தியர்களாகவே உள்ளனர். கூகுல் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா உள்ளிட்டோரை உதாரணமாக கூறலாம்.

அதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளார். அதேபோல் அமெரிக்க அரசாங்க பதவிகளிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் இந்திய வம்சாவளி ஒருவருக்கு நாட்டின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த துறையில் பிரதான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்

அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு நிபுணராக இருந்து வந்த ராதா ஐயங்கார் (Radha Iyengar) என்ற பெண்மணியை தற்போது பாதுகாப்புத்துறையின் துணை செயலாளராக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க செனட் சபையின் நடந்த வாக்கெடுப்பில் 68-30 என்ற அளவில் வாக்குகள் பதிவானதை தொடர்ந்து ராதா ஐயங்காருக்கு பாதுகாப்புத்துறையின் துணை செயலாளர் பதவியை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe biden) நிர்வாகம் வழங்கியுள்ளது.

யார் இந்த ராதா.?

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்புத்துறை துணை செயலகத்தின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட்ட ராதா ஐயங்கார், தனது பகுப்பாய்வு திறனை சரியாக வெளிப்படுத்தியதால், அதிபர் பிடன் ராதாவை தற்போது பாதுகாப்புத்துறையின் துணை செயலாளராக ஆக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது.

இதற்கு முன்பும் ராதா பல்வேறு நிறுவனங்களில் தலைமை பொறுப்புக்களை வகித்துள்ளார். கூகுளில் நிறுவனத்தின் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குநராக இருந்தார். அதற்கும் முன்பு பேஸ்புக்கில் கொள்கை பகுப்பாய்வுக்கான உலகளாவிய தலைவராக பணியாற்றினார்.

கென்யா: ‘இயேசு வர்ராரு வெயிட்பண்ணுங்க’.. நான்கு பேரின் உயிரை குடித்த போதகர்.!

அதேபோல் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த பல மூத்த பணியாளர் பதவிகளையும் ராதா வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் ராதா பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.