உக்ரைனுக்கு அமெரிக்காவில் தயாராகும் டாங்கிகள்: ஜேர்மனியில் தொடங்கும் பயிற்சி


உக்ரைனிய படைகளுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சியை அமெரிக்கா தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைனிய படைகளுக்கு பயிற்சி

உக்ரைனிய படைகளுக்கு வரும் வாரங்களில் ஆப்ராம்ஸ் டாங்கிகளை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது தொடர்பான பயிற்சிகளை அமெரிக்கா தொடங்க உள்ளது.

மேலும் அதிகாரிகளின் கூற்றுப்படி, 31 ஆப்ராம்ஸ் டாங்கிகள் மே மாத இறுதியில் ஜேர்மனியில் உள்ள கிராஃபென்வோஹ்ர் பயிற்சி பகுதிக்கு வந்தடையும் எனவும், அதிலிருந்து இரண்டு வாரங்களில் வீரர்களுக்கு பயிற்சி தொடங்கும் என தெரியவந்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்காவில் தயாராகும் டாங்கிகள்: ஜேர்மனியில் தொடங்கும் பயிற்சி | Us Begin Abrams Tanks Training For UkraineSky News

இந்த பயிற்சி திட்டம் 10 வாரங்கள் நீடிக்கும் எனவும் சுமார் 250 உக்ரைன் துருப்புக்கள் பயிற்சி பெறுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட டாங்கிகள்

பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆப்ராம்ஸ் டாங்கிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் பயன்படுத்த கொடுக்கப்படாது.
அதற்கு பதிலாக 31 M1A1 போர் டாங்கிகள் அமெரிக்காவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இவை தயாரானதும் போரின் முன்வரிசைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்காவில் தயாராகும் டாங்கிகள்: ஜேர்மனியில் தொடங்கும் பயிற்சி | Us Begin Abrams Tanks Training For UkraineSky News

அத்துடன் உக்ரைனின் தேவைகளை பூர்த்தி செய்ய டாங்கிகள் மீண்டும் பொருத்தப்பட்டு வருகின்றன. 

புதுப்பிக்கப்பட்ட டாங்கிகள் தயாராக இருக்கும் நேரத்தில் உக்ரைனிய துருப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும், எனவே இதன் மூலம் அவர்கள் உடனடியாக போருக்கு செல்ல முடியும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.