முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஓர் விசரன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார்
கட்சியின் முன்னாள் தவிசாளர் புதிய தவிசாளர் நியமனத்தை ஏற்கவில்லை என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தானாகவே ஜீ.எல். பீரிஸ் விலகிக் கொண்டார், தற்பொழுது புதிய ஒருவரை தவிசாளராக நியமித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணி எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.