வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கார்துாம்,-சூடானில், ஜனநாயக ஆட்சி அமைய உறுதி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர் அப்தெல் பத்தா அல் – புர்ஹான், ”வெளிநாடுகளின் துாதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை துவங்கி உள்ளது,” என, தெரிவித்துள்ளார்.
![]() |
வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது.
ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே, சமீபத்தில் பயங்கர மோதல் வெடித்தது.
இதில், இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையை பொது மக்கள் கொண்டாட வசதியாக, 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. எனினும், கார்துாம் நகருக்கு அருகே ஒரு சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது.
![]() |
ஒரு வாரத்திற்கும் மேல் போர் நடக்கும் நிலையில், நேற்று முதன்முறையாக ராணுவ ஆட்சியாளர் அப்தெல் பத்தா அல் – புர்ஹான் கூறியதாவது:
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதியை நான் கைவிடவில்லை. நாட்டை பாதுகாப்பான முறையில் ஜனநாயக ஆட்சி முறையை நோக்கி அழைத்துச் செல்வதில் ராணுவம் உறுதியுடன் உள்ளது.
இங்குள்ள வெளிநாடுகளின் துாதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ராணுவ விமானங்கள் வாயிலாக பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement