சென்னை ஆவடியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம்21ம் அன்று நடைபெற்ற சங்கத்தின் 35வது ஆண்டு பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது டப்பிங் யூனியனின் உறுப்பினராக உள்ள சங்கீதா என்ற பெண்ணை டப்பிங் யூனியன் பொதுக்குழு கூட்டத்தில் பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி தாக்கி காயப்படுத்தியதாக நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம் பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், நடிகர் ராதாரவி, கதிரவன் பாலு (இயக்குநர் TN பாலு மகன்), கவிதா (இயக்குநர் TN பாலு மகள்) சரவணன் (நடிகர்கள் ராஜேந்திரன்-ஸ்ரீலேகா தம்பதியின் மகன்), கோபால்( நடிகர் பெரிய கருப்பு தேவர் மகன்), ஜெகதீஷ் (காமெடி நடிகர் அமிர்தலிங்கம் மகன்) கிரிஜா மற்றும் பிரபு ஆகிய 8 நபர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராதாரவியின் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் விருகம்பாக்கம் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.