விக்கிரவாண்டியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கு – 2 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி அரசு பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரசு பள்ளி மாணவி ஒரே அதே பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி செங்கமேட்டு ஏரிக்கரை பகுதியில் தனிமமையில் சந்தித்து வந்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்திற்கான எந்த தடையங்களும் கிடைக்காததால் போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பது பெரும்சவாலாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்கள் அவரிடம் இருந்து பிடுங்கி சென்ற செல்போனை இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனை ஆன் செய்துள்ளனர். இந்த சிக்னலை கொண்டு தனிப்படை போலீசார் குற்றாவாளிகளை பிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் மாணவியின் செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகள் மாட்டிக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரனை செய்து வந்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.