Google Pixel 7a ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியீடு! பட்ஜெட் விலையில் கூகுள் போனா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் Google Pixel போன்களில் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போனாக Pixel 7a அடுத்த மாதம் நடைபெறும் கூகுள் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் Face Unlock feature மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி இடம்பெறும். இதே வசதி
Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro
ஆகிய ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற வசதி இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டாவது ஜெனெரஷன் Tensor சிப் இடம்பெறும். இந்த போன் 12GB LPDDR5 RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வசதி, Android 13 OS உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Charcoal, Snow, Sea (Light Blue), Coral ஆகிய கலர் ஆப்ஷன்களில் Google Store மூலம் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும்.

கேமரா வசதியாக இதில் 64 MP Sony IMX 787 முக்கிய கேமரா, 12MP அல்ட்ரா வைட் லென்ஸ், 5W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இடம்பெறும். இதன் விலை 499$ விலையில் (இந்திய ரூபாய் மதிப்பில் 40,900 ஆயிரம் ரூபாய்) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Google 6a விலையை விட 4100 ஆயிரம் ரூபாய் அதிகம்.

இந்த
Google 7a ஸ்மார்ட்போனுடன்
புதிதாக Fold வகை ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடவுள்ளது. ஏற்கனவே உலகளவில் பல நிறுவனங்கள் Fold வகை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. இதில் Google நிறுவனமும் அதன் பங்கிற்கு இந்த வகை ஸ்மார்ட்போனை வெளியிட தயராகிவருகிறது.

Google I/0 நிகழ்ச்சி வரும் மே 10 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியானது உடனடியாக விற்பனைக்கு தயாராகிவிடும். இந்த நிகழ்ச்சியில் Google 8 சீரிஸ், Google Fold, Google 7a ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.