Sivaji Ganesan: மனதை கல்லாக்கிக்கொண்டு அதை செய்தேன்.. சிவாஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து பகிர்ந்த பிரபலம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகர் சிவாஜி கணேசன் இறப்பதற்கு முன்பு இறுதியாக நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

சிவாஜி கணேசன்தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவாஜி கணேசன். தொடர்ந்து பல படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என நடித்துள்ளார் சிவாஜி கணேசன். என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் அதுவாகவே படங்களில் வாழ்ந்து விடுவார் சிவாஜி கணேசன்.
​Suriya: ஆரம்பத்தில் ரொம்ப வெட்கப்பட்டோம்… அப்புறம்… சூர்யாவுடனான சந்திப்பு குறித்து மனம் திறந்த சச்சின்!​
50 ஆண்டுகள்அந்த காலத்து சினிமா ரசிகர்கள் இப்போதும் சிவாஜி மாதிரா வராதுப்பா என்று சொல்வதை கேட்க முடியும். அந்த அளவுக்கு தனது அசாத்திய நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதிலும் சினிமா உலகிலும் இறந்த பிறகும் கோலொச்சி வருகிறார் சிவாஜி கணேசன். 50 ஆண்டுகள் சினிமாவில் தனது ஆளுமையை நிரூபித்து வந்த நடிகர் சிவாஜி கணேசன் 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
​Meena: ‘அம்மா பத்தி தப்பா பேசாதீங்க’… மீனாவின் மகள் நைனிகா உருக்கமான வேண்டுகோள்!​
விருதுகள்விடுதலை போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்கள், கடவுல்கள் என பல வேடங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன் கண்முன் கொண்டு வந்துள்ளார். இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் போல என்று நினைக்க வைக்கும் அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்ட விருதுகள் ஏராளமானவற்றை குவித்துள்ளார்.
​உஷாரான அதிதி ஷங்கர்!​
கலைப்புலி எஸ் தானுநடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தனது 72 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு.
​Nayanthara: கேரள புடவையில் கணவருடன் கலக்கலாய் விஷு கொண்டாடிய நயன்தாரா!​
என் மீது பாசம்இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கலைப்புலி தானு அளித்துள்ள பேட்டியில் சிவாஜி கணேசனின் கடைசி நிமிடங்களில் மருத்துவமனையில் நடந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் சிவாஜி சாருக்கு தன் மீது அதிக பாசம் உண்டு என்றும் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும் சிவாஜி கணேசன் குடும்ப விஷயங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார் தானு.
​Kizhakku Vasal: கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ்… இதுதான் காரணமா?​
பேத்தி குறித்து கவலைசிவாஜி கணேசனுக்கு அவரது பேத்தியின் திருமண வாழ்வு குறித்து மன உளைச்சல் இருந்தது என்றும் தன்னுடைய பேத்தி மகிழ்ச்சியாக இல்லை.. தான் மட்டும் எப்படி நிம்மதியாக வாழ்வேன்? தன்னிடம் புலம்பினார் என்றும் தெரிவித்துள்ளார் தானு. மேலும் சிவாஜி கணேசன் தன்னிடம் அதை பேசிய 15 நாட்களில் அவர் மரணமடைந்தார் என்றும் கூறியுள்ளார் தானு.
​Actor: ஸ்ட்ரிக்ட் இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் வாரிசு நடிகர்!​
செயற்கை சுவாசம்மருத்துவமனையில் சிவாஜி கணேசன் மரணமடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அங்கு சென்றதாகவும், படுக்கையில் இருந்த அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அப்போது இனிமேல் செயற்கை சுவாசம் அளிப்பதில் பலனில்லை என்றும் நீங்களே உங்கள் கையால் எடுத்துவிடுங்கள் என மருத்துவர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரிடம் கூறியதையும் தெரிவித்துள்ளார்.
மனதை கல்லாக்கிக்கொண்டுமருத்துவர் கூறியதைக் கேட்ட ராம்குமார், தன்னால் அது முடியாது என ராம்குமார் கதறி அழுததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மனதை கல்லாக்கிக் கொண்டு தான்தான் செயற்கை சுவாசத்தை அவரது முகத்திலிருந்து கழட்டியாதாகவும் உருக்கமாக கூறியுள்ளார் கலைப்புலி எஸ் தானு. தானுவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. கலைப்புலி எஸ் தானு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivaji Ganesan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.