Suriya: ஆரம்பத்தில் ரொம்ப வெட்கப்பட்டோம்… அப்புறம்… சூர்யாவுடனான சந்திப்பு குறித்து மனம் திறந்த சச்சின்!

தமிழ் திரை உலகில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் சூர்யா. முன்னணி ஹீரோவாக உள்ள நடிகர் சூர்யா, தனது 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அதோடு தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளை படிக்க வைத்தும் வருகிறார் நடிகர் சூர்யா.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

தற்போது நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Meena: ‘அம்மா பத்தி தப்பா பேசாதீங்க’… மீனாவின் மகள் நைனிகா உருக்கமான வேண்டுகோள்!

கங்குவா திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா சமீபத்தில் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். மும்பையில் புதிய தொழிலை தொடங்கியிருப்பதாலும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் அவர் மும்பையில் செட்டிலானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த சூர்யா மரியாதையும் அன்பும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் திடீரென சச்சினை சந்தித்ததன் காரணம் என்ன என கேட்டு வந்தனர்.

உஷாரான அதிதி ஷங்கர்!

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கேள்விக்கு தனது இணையப் பக்கத்தில் பதிலளித்து வருகிறார். அதில், சூர்யாவின் ரசிகர் ஒருவர் சூர்யா, சச்சினை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து இது குறித்து சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு, பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர், நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இறுதியில் இருவரும் நன்றாக பேசிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு தற்போது பெரும் வைரலாகி வருகிறது. மேலும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகிறது. இதனிடையே நடிகர் சூர்யா கங்குவா படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கங்குவா படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு கொடைக்கானலில்நடைபெற்று வருவதாக தகவல் பரவி வருகிறது.

Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் படத்திற்காக ஜெயராம் பெற்ற சம்பளம்… இவ்வளவுதானா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.