ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Suriya Jyothika: ஜோதிகா தனக்காக பல தியாகங்களை செய்துள்ளதாக உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகர் சூர்யா.
சூர்யா ஜோதிகாநடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் இணைந்து 7 படங்களில் ஒன்றாக நடித்தனர். ஒன்றாக படங்களில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார் நடிகை ஜோதிகா.
Kamal Haasan: திருப்தியுடன் போயிருப்பார்.. உங்கள் வலியை காலம் ஆற்றும்.. மம்மூட்டி தாயார் மறைவுக்கு கமல் இரங்கல்!
மீண்டும் நடிப்புசூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். பிள்ளைகள் வளர்ந்துள்ள நிலையில் நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனார் ஜோதிகா. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
Ponniyin Selvan 2: வாவ்… கமலின் கம்பீர குரலில் பொன்னியின் செல்வன் 2 இன்ட்ரோ.. வேற லெவல்!
சிறந்த நடிகர்தற்போது ஜோதிகாவும் சூர்யாவும் மும்பையில் செட்டில் ஆகியுள்ளனர். ஜோதிகா பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் விகடன் விருது விழாவில் ஜெய் பீம் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தன. நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நடிகர் சூர்யா படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.Sivaji Ganesan: மனதை கல்லாக்கிக்கொண்டு அதை செய்தேன்.. சிவாஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து பகிர்ந்த பிரபலம்!
நிறைய தியாகம்தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா இந்த விருதை தனது மனைவி ஜோதிகாவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக கூறினார். ஜோதிகா தனக்கான நிறைய தியாகங்களை செய்துள்ளார் என்றும், குழந்தைகளை அவர் கவனித்துக்கொண்டு தன்னை நடிக்க வைத்தார் என்றும் தன்னுடைய வாழ்க்கையில் ஜோதிகா எப்போதும் தனக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
Suriya: ஆரம்பத்தில் ரொம்ப வெட்கப்பட்டோம்… அப்புறம்… சூர்யாவுடனான சந்திப்பு குறித்து மனம் திறந்த சச்சின்!
வாழ்க்கையின் ஒரு பகுதிமேலும் தன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் ஜோதிகாவும் ஒரு பகுதியாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் சூர்யா. சூர்யா ஜோதிகா குறித்து பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சூர்யா ஒரு சிறந்த கணவர் என்பதை மீணடும் நிரூபித்துள்ளார். தனது காதல் மனைவியான ஜோதிகா மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த சூர்யா ஒருபோதும் தவறியதில்லை.இந்த விருது விழா மேடையில் தனது மனைவி மீதுள்ள காதலையும் மரியாதையையும் அழகாய் வெளிப்படுத்திவிட்டார் சூர்யா என புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.Meena: ‘அம்மா பத்தி தப்பா பேசாதீங்க’… மீனாவின் மகள் நைனிகா உருக்கமான வேண்டுகோள்!
Suriya Jyothika