ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம்(24.04.2023) விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்தக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் வாக்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட சந்திப்பு
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.