நியூயார்க்: அமெரிக்காவில் ஏரியில் படகில் சென்றபோது மாயமான இந்திய மாணவர்கள் இருவரது உடல்கள், மூன்று நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டன.
அமெரிக்காவின் இன்டியானா போலிசில் உள்ள ஐ.யு., கெல்லி ஸ்கூல் என்ற கல்லுாரியில் சித்தன் ஷா, 19, ஆர்யன் வைத்தியா, 20, என்ற இரு இந்திய வம்சாவளி மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த 15ம் தேதி இவர்கள் இருவரும் நண்பர்களுடன் பான்டூன் ஏரிக்கு சென்றனர். ஷாவும், ஆர்யனும் படகில் சவாரி செய்தனர்.
இருவரில் ஒருவர் படகில் இருந்து குதித்து நீந்த முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் நீந்த முடியாமல் நீரில் தத்தளித்துள்ளார். இவரைக் காப்பாற்ற மற்றொருவர் நீரில் குதித்துள்ளார். இருவரும் நீரில் மூழ்கினர். இவர்களது நண்பர்கள் இருவரையும் தீவிரமாக தண்ணீரில் தேடியும் மீட்க முடியவில்லை.
இதையடுத்து போலீசில் புகாரளித்தனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தேடிய போது, வானிலை காரணமாக தேடுதல் தடைபட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரது உடல்களையும் போலீசார் மூன்று நாட்களுக்குப் பின் மீட்டனர். இந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement