கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் எரும்புக்காடு அகதிகள் முகாமில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் சிவானந்தன் (54). இந்நிலையில் சம்பவத்தன்று நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய சிறுமி பெட்டிக்கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது சிவானந்தன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.