ஜம்மு: ட்விட்டர் ப்ளூ டிக் அங்கீகாரத்துக்கு பணம் செலுத்தாத போதிலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் மீண்டும் இடம்பெற்றுள்ளது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா. இவரை ட்விட்டரில் 3.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “ட்விட்டர் ப்ளூ டிக் அங்கீகாரத்துக்காக நான் பணம் செலுத்திவிட்டேன். சரிபார்ப்பதற்காக எனது தொலைபேசி எண்ணை அவர்களுக்கு கொடுத்துள்ளேன். இதைத்தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எனக்காக மஸ்க் பணம் செலுத்தினாலும் நல்லதுதான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர்களிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
Apparently I’ve paid for Twitter Blue & given them a phone number to verify except that I haven’t. Mr Musk are you paying for mine as well?